காந்திபுரம் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக நாளை திறப்பு - முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைக்கிறார்

கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்ட இரண்டடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (நவ., 1) திறந்து வைக்கின்றார். 



கடந்த 2010-ம் ஆண்டு செம்மொழி மாநாடு நடைபெற்ற போது காந்திபுரத்தில் மூன்றடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சி அமைந்ததால், மூன்றடுக்கு மேம்பாலம் என்பதை இரண்டடுக்கு மேம்பாலம் எனத் திட்டம் மாற்றப்பட்டு, கட்டுமான பணிகள் கடந்த 2014ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வந்தது. சுமார், ரூ.195 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. 

காந்திபுரம் பார்கேட் பகுதியில் இருந்து லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் வரையிலான பாலக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. 54 தூண்களுடன் 16.6 மீ., அகலத்துடன், நான்கு வழித்தடமாகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து,வர்ணம் பூசப்பட்டுள்ளது. மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு விட்டன. 



இந்த நிலையில், நாளை (நவ., 1) மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். 

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இன்று நடைபெற்று வருகின்றது. பாலம் முழுவதும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...