காற்றில் பறக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை - பேனருக்கு பதிலாக பலூனில் அலப்பறை

கோவை, அக்டோபர் 31: கோவை காந்திபுரம் மேம்பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் படங்களுடன் பிரமாண்ட பலூன் பறக்கவிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காந்திபுரம் பகுதியில் 1,752 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் உருவ படத்துடன் கூடிய பிரம்மாண்ட பலூனை அமைச்சர் வேலுமணி பறக்கவிட்டார். 



உயிருடன் இருப்பவர்கள் புகைப்படங்களை பிளக்ஸ், பேனர் போன்றவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது என நீதிமன்ற உத்திரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பலூன் மூலம் இவர்களின் புகைப்படங்கள் போடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதேவேளையில், அண்ணா புகைப்படத்துடனும், இரட்டை இலை சின்னத்துடனும் பாலம் முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...