ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஈஎம்ஐ திட்டம் அறிமுகம்

கோவை, நவம்பர் 1: கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான எளிய ஈஎம்ஐ திட்டம் காபிடல் ஃப்லோட் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த அறிமுக நிகழ்ச்சியில் முதன்மை இயக்க அதிகாரி திரு.வி.ராமகிருஷ்ணா பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணம் கடனாக வட்டி இல்லாமல் வழங்கப்படும். இது ஒரு லாப நோக்கமற்று செயல்படுத்தப்பட்டுள்ளது. கடன் பெற விண்ணப்பம் ஆய்வு கட்டணங்களோ வேறு செலவுகளோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்கோ அல்லது கடன்பெறவோ முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றார்.

இதனைத்தொடர்ந்து, காபிடல் ஃப்லோட் கோவை கிளை மேலாளர் திரு. மணிகண்டன் பேசுகையில், முன்பணம் எதுவும் இல்லாமல் வட்டி இன்றி ஆவண கட்டணமின்றி இந்தத் திட்டத்தினை துவங்கியிருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒன்பது மாதங்கள் மற்றும் பன்னிரண்டு மாதங்கள் என்ற எளிதான சுலப தவனை முறையில் இந்தக் கடன் வசதி வழங்கப்படுகிறது.



நோயாளிகளும், ரத்த உறவுகளும் இந்தக் கடனுக்காக அவர்களது ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் 70 சதவிகிதம் நோயாளிகள் தங்கள் மருத்துவ செலவுகளை உடனடியாக பெற முடியும். கோவை மக்களின் நலனுக்காக எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் மற்றொரு சமூக சேவை முயற்சியாக இது கருதப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மருத்துவர் திரு. பி.சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...