ரூ. 900 கோடி செலவில் உப்பிலிபாளையம் முதல் மருத்துவக்கல்லூரி வரை மேம்பாலம்: முதலமைச்சர் அறிவிப்பு


கோவை, நவம்பர் 1 : கோவையில் 900 கோடி மதிப்பீட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரை புதிய மேம்பாலம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

காந்திபுரத்தில் ரூ.195 கோடி மதி்ப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. அதில் பார்க்கேட் முதல் லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் கொண்ட முதல் அடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை  இன்று மாலை திறந்து வைத்தார். 



புதிய பாலம் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன்  மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். முதல் அடுக்கு மேம்பால கல்வெட்டு, குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான கல்வெட்டினை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

ரூ.120 கோடியில் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், பாலத்தின் இரண்டாம் அடுக்கும் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.என்று   முதலமைச்சர்  அறிவித்தார்.



மேலும், ரூ.121 கோடியில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலபணிகள் விரைவில் துவங்கும். அதேபோல, உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரை 9 கீ.மீ தூரம் வரை ரூ.900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.

மேற்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பட்டு வருகின்றது. பாலங்கள், புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்ட பின் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். கோவை மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், 24 மணி நேரமும் செயல்படும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகின்றார். அவினாசி அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். எதிர்கட்சிகளின் எந்த விமர்சனமும் தங்களிடம் எடுபடாது, என்றார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர், பாலத்தின் வழியாக சிறிது தூரம் பயணம் செய்தார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...