டெங்கு பாதிப்பு எங்கே அதிகம் ? - அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம்

கோவை, நவம்பர்.3:  தெலுங்குபாளையம், கணபதி மற்றும் சிங்காநல்லூர் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்கள் தான் டெங்கு  காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு அதிக அளவில் அரசு மருத்துவமனைக்கு    சிகிச்சைக்காக வருகின்றனர். 



தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாவோர்  அதிகரித்த வரும் நிலையில் கடந்த நான்கு மாதங்களில் கோவை மாவட்டத்தில் மட்டும் 60-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.  ஏடிஸ் என்ற வகை கொசு இனத்தால் இந்த காய்ச்சல் பரவி வரும் நிலையில் இன்று, கொசு மனித உயிருக்கு எமனாக உருவெடுத்துள்ளது. 

 

சுத்தமான நீரில் உற்பத்தியாகும் இந்த கொசு இனம் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை என்றும், இவ்வகை கொசுக்கள் கடிப்பதாலேயே டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும், கொசு உற்பத்தியாகும் வகையில் வீட்டின் அருகே தண்ணீரை தேங்கவிட்டிருக்கும் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அபராதம் 

கோவைமாநகரை பொறுத்தவரையில் அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இதுவரை ரூ. இரண்டு லட்ச்சத்திற்கு மேல் அபராதமாக வசூலித்துள்ளனர். நேற்று கோவை வடக்கு மண்டலத்திலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கொசு உற்பத்தியாகும் வகையிலும் சுற்றுப்புறத்தை வைத்திருந்த வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், மாநகராட்சிக்கு உட்பட்ட வளாகங்கங்களே சுகாதாரமற்ற நிலையில் இருப்பது வேதனைஅளிப்பதாக உள்ளது. 

இந்த நிலையில், கோவை மாநகரில்  குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் இருந்து தான்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் நோயாளிகள் வருவதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.B.அசோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது :-

கோவை அரசு மருத்துவமனைக்கு நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிசை பெற்று செல்கின்றனர். டெங்கு காய்சசல் பாதிப்பு காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் 50 சதவிகிதத்திற்கு மேற்படடவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது டெங்கு காய்ச்சலால் அனுமதியாவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.  

எந்த பகுதி 

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 

இம்மருதத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது வரை சிகிசைக்கு பெற்றவர்களது விவரங்களின் அடிப்படையில் தெலுங்குபாளையம், கணபதி மற்றும் சிங்காநல்லூர் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்கள் தான் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் சிகிச்சைக்காக வருகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் கூறிய விவரங்களின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்  பகுதிகளில் அதிகமாக ஆய்வு நடத்தி சுகாதாரத்தை பேணிக்காத்தால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறிந்திடும். 

Newsletter

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...

Special Weekly Trains Announced Between Sambalpur and Podanur

To cater to the increasing travel demand, Southern Railway will operate weekly special trains between Sambalpur in Odish...

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...