டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி

கோவை, நவம்பர்.3: கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில்  கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் இன்று காலை குழந்தை பலியாகியுள்ளது. 

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. தையற்கலைஞரான இவருக்கு ரய்யான் (2) என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்தது. இந்த நிலையில், அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குழந்தையின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து கடந்த 1-ம் தேதி அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  டெங்குவுக்காக உள்ள தனி வார்டில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை ரய்யான் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...