'கமலஹாசன் நாட்டுக்குள்ளேயே இருக்க முடியாது' - பாரத்சேனா

கோவை, நவம்பர்.5: இந்துக்களை தீவிரவாதிகள் என்று சொன்னால் கமலஹாசன் நாட்டுக்குள்ளேயே இருக்க முடியாது என்று பாரத்சேனா அமைப்பினர் காட்டமாக அறிவித்தனர். 

நடிகர் கமலஹாசன் சமீபகாலமாக அரசியலில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளார். 

அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழலை தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்த கமலஹாசன் சமீபத்தில்  வாரப்பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். 

அதில், 'இந்து தீவிரவாதம் இல்லை என்று இனி மேல் சொல்ல முடியாது' என்ற வார்த்தையை பயன்படுத்தி கட்டுரையை எழுதியுள்ளார்.  இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இதனிடயே கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு பாரத் சேனா அமைப்பைச் சர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, கமலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். தொடர்ந்து அந்த அமைப்பைச்சேர்ந்த மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நடிகர் கமலஹாசன் இந்து மதத்தை இழிவுபடுத்தியுள்ளார். கேரளாவில் இந்துக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். அங்கு உள்ள சில முக்கிய நபர்களுடன் தொடர்பு வைத்துள்ள கமலஹாசன் இங்கும் இந்துக்களை எதிர்த்து வருகிறார். 

இந்துக்கள் அமைதியாக இருக்கின்றனர். இல்லையென்றால் கமல் இந்த நாட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. இதேபோல், கமல் பேசினால் அவரது திரைப்படங்களை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம்' என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...