லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்


கோவை, நவம்பர்.5:  கோவையில் லஞ்சம் வாங்கிய மூன்று போலீசாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக பணிபுரிபவர் சின்னராஜ். இவருடன் தலைமை ஏட்டு கனகராஜ் மற்றும் டிரைவர் சீனிவாசன் ஆகியோர் கடந்த 2-ம் தேதி இரவு கள்ளப்பாளையம் பிரிவு அருகே வாகனதணிக்கை நடத்தினர். அப்போது அவ்வழியாக கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி லஞ்சம் பெற்றனர். 

இவர்கள் லஞ்சம் வாங்குவதை அவ்வழியாக சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். மூர்த்தி பார்த்தார். உடனடியாக மூவரிடமும் விசாரித்ததில் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, லஞ்சப்புகாரில் சிக்கிய மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து லஞ்சப்புகாரில் சிக்கிய மூன்று போலீசாரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...