முன்விரோதம் காரணமாக கொலை - இருவருக்கு ஆயுள் தண்டனை

கோவை, நவம்பர் 6: முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் கைதான இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவி இந்த பழக்கத்தை கண்டிக்கவே, மூர்த்தி அந்த பெண்ணுடனான பழக்கத்தை நிறுத்திக்கொண்டுள்ளார். இருப்பினும், அந்த பழக்கம் தொடருவதாக எண்ணிய அந்த பெண்ணின் கணவர் சதிஷ்குமார், தனது நண்பர் ஹரிகிருஷ்ணனுடன் இணைந்து கடந்த ஆண்டு மூர்த்தியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

இதைத் தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ்குமார், ஹரிகிருஷ்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திரு.குணசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...