"கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்"


கோவை, நவம்பர் 7: கோவை, ஒண்டிப்புதூர் அருகே இருகூர் இரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், மேம்பாலத்தின் மீது அதிகளவிலான விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த மேம்பாலத்தை திமுக மாநகர தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டதுடன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து, அவர் கூறியதாவது:- "இருகூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் தற்போது வரை இங்கு விபத்து ஏற்பட்டு 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் கூட அமைக்கப்படாத அவலநிலை நீடிக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறை இந்த மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திமுக ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாட்டின்போது, அடிக்கல் நடப்பட்ட காந்திபுரம் மேம்பாலம் மக்கள் பயன்படும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் திமுக ஆட்சியில் போடப்பட்ட வரைபடத்தை மாற்றி தனியார் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மாவட்டம் முழுக்க ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

கோவையில் தற்போது நடைபெற்று வரும் 7 மேம்பாலப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...