பண மதிப்பிழப்பு தினம் கருப்பு தினமாக அனுசரிப்பு

கோவை, நவம்பர், 8: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று கருப்பு தினமாக அனுசரித்தனர்.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதியன்று மத்திய பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டது. உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, வங்கிகளில் பணமாற்று நடவடிக்கையின் போது முதியவர்கள் உள்ளிட்ட பலர் கூட்ட நெரிசல் மற்றும் இதர விபத்துக்களினால் உயிரிழந்தனர். இதனிடையே, பண மதிப்பிழப்பு அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. 

இந்த தினத்தினை கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம், அஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், லஞ்சம் ஒழியும், தீவிரவாதத்திற்குச் செல்லும் பணம் தடை படும், கருப்புப் பணம் ஒழியும் என்று பாஜக அரசால் சொன்னவை எதுவுமே நடக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிக்குள்ளானதுடன் இதுவரை அதன் பாதிப்பில் இருந்து மீளவில்லை. சிறு, குறு தொழில் வணிகர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் சார்பிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...