ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்


கோவை, நவம்பர் 10 

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

கோவை மாவட்டம் கோவில்பாளையம் விநாயகபுரம் பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளஞ்செழியன் என்பவர் பெயரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக, காவல் நிலைய ஆய்வாளர் சேகரன் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகியோர் ரூ. 5000 லஞ்சம் பெற்றதாக கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 

காவலர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்று காலை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். அப்போது, சேகரன் மற்றும் தனபால் ஆகியோரை வரும் 24-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...