ஸ்மார்ட் சிட்டி குறித்து மாநகராட்சி நிர்வாகிகள் ஆலோசனை


கோவை, நவம்பர் 10 

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கோவை மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. எனவே,  இதற்கான பணிகளைத் தொடங்கிய மாவட்ட நிர்வாகம், குளங்களை தூர்வார்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதனிடையே, ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிறுவனத்தால், கோவையில் 'புதுமையான ஸ்மார்ட் சிட்டி' ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சி மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப. காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் என். நடராஜன், செயற்பொறியாளர்கள் சரவணன், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...