சர்வதேச எஸ்ஐபி அபாகஸ் போட்டியில் 3600 குழந்தைகள் பங்கேற்பு

கோவை, நவம்பர் 12:

எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 3600 குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் சர்வதேச அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், இலங்கை, தன்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 200 குழந்தைகளும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 3400 குழந்தைகளும் பங்கேற்றனர். இப்போட்டியினை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் துவக்கி வைத்தார்.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 நிமிடங்களில் 200 வினாக்களுக்கு போட்டியாளர்கள் விடையளித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற 600 போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இந்தப் போட்டி லிம்கா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம்பிடித்துள்ளது.



இதுகுறித்து எஸ்ஐபி அகாடமி இந்தியா-வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனர் திரு. தினேஷ் விக்டர் கூறுகையில், 'இது போன்ற போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்பதால் மன ஒருமைப்பாடு, காட்சி நினைவு, எண்திறன், கவனிக்கும் திறன் உள்ளிட்டவை மேம்படுகிறது. மேலும், அவர்கள் தன்னம்பிக்கையும் பெறுகின்றனர்' என்றார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...