அரசின் மானிய விலை வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, நவம்பர் 13

உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்த 50 சதவீதம் மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி வரை பெறப்படுகின்றன.

இது தொடர்பாக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2017-18ம் ஆண்டிற்கு மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழைகளிலான பரிசல்கள் வாங்கிட 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என மீன்வளத்துறை பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை  அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி,  2017-18 ம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டது.

விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு 16.62 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும். பங்கு மீனவர்கள்/உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே கடந்த 5 வருடங்களுக்குள் வலை மற்றும் கண்ணாடி நூலிழையிலான பரிசல்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.விருப்பமுள்ள உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வரும் 20ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு (தொலைபேசி -0424 - 2271912) கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...