பள்ளியில் தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்

கோவை, நவம்பர் 14: கோவை அருகே தனியார் பள்ளியில் சக மாணவிகளிடம் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 9-ம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் இன்று சமூக ஆர்வலர் மரீனா-வுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து மாணவி கூறுகையில், செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். தான் படிக்கும் பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பள்ளியில் சேரும் கழிவுநீரையும் கற்களையும் மாணவ, மாணவிகளைக் கொண்டே அகற்றுகின்றனர். 

மேலும் பள்ளியில் சிறு குழந்தைகளுடன் தமிழில் பேசியதற்காக அபராதம் விதிக்கின்றனர். கடந்த வாரம் நான் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்ததால் பேருந்தில் வர முடியாமல் நடந்தே வீட்டிற்கு வந்தடைந்தேன். 

பள்ளி நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்தும், எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பது குறித்தும் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் பெற்றோரை தரக்குறைவாக பேசுகின்றனர். மகள் மனவேதனை அடைந்ததால் வேறு வழியில்லாமல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். தனது மகளை போலவே பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டில் சொல்லக்கூட பயந்து கொண்டு சொல்லாமல் உள்ளனர் என்றார் மாணவியின் தந்தை.

மாணவியின் குடும்பம் தனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் தன்னை தொடர்பு கொண்டு பள்ளியில் நடக்கும் அவலங்கள் குறித்து தெரிவித்தனர். இதனையடுத்தே அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க அழைத்து வந்தேன் என்றார் சமூக ஆர்வலர் மரீனா.

குறிப்பாக பள்ளியில் விளையாட்டுத் துறை ஆசிரியர் கார்த்திக், மாணவிகளிடம் அத்துமீறி நடத்து கொள்கிறார். கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பாதிக்கப்பட்ட மாணவி தன்னிடம் தெரிவித்ததால் ஆட்சியரிடம் புகார் அளிக்க அவர்களை அழைத்து வந்துள்ளேன். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...