கோவைக்கு புதிய காவல் ஆணையர்

கோவை, நவம்பர் 14

திரு. கே. பெரியய்யா, கோவை காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  கோவை காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி  காவல் ஆணையராக  மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவை காவல் ஆணையராக இருந்த திரு. அமல்ராஜ், திருச்சி மாவட்ட காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட கூடுதல் ஆணையர் திரு. கே. பெரியய்யா, கோவை காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

இதேபோல, திருச்சி காவல் ஆணையர் திரு. ஏ. அருண் சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையராகவும்,  காவல்துறை பொது விநியோக துறையில் ஐ.ஜி.,யாக இருந்த வெங்கட்ராமன் நிர்வாகத்துறை ஐ.ஜி.,யாகவும், நிர்வாக பிரிவில் ஐ.ஜி.,யாக இருந்த தினகரன் ஸ்தாபன ஐ.ஜி.,யாகவும், சென்னை பயிற்சி கல்லூரி ஐ.ஜி.,யாக சோனல்மிஸ்ரா, அமலாக்கத்துறை கண்காணிப்பாளராக அமானத் மாற்றப்பட்டுள்ளனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...