பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் மனு

கோவை, நவம்பர் 18: பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் ஒருவர் மனு அளித்தார்.



கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (74). கோவையில் தலைமைக்காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இன்று காலை பி.ஆர்.எஸ். மைதானத்திற்கு மனுவுடன் வந்தார். மனுவில், அங்காத்தாள், சரவணக்குமார் என்ற இருவர் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது குறித்து காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 'பத்திரம் ஒன்றை திருடியதாக என்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இது முற்றிலும் போலியானது. இது தொடர்பாக போலீசாரிடம் தொடர் புகார் அளித்து வருகிறேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே, காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன். என்றார்.

இதே போல், விபத்து ஒன்றில் கால்களை இழந்த பெண் காவலர் ஒருவர் குறை தீர்ப்பு முகாமிற்கு மனு அளிக்க வந்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...