விமான டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது

கோவை, நவம்பர் 22:

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் தங்களின் விமான டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2018-ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.

இது தொடர்பாக விமானநிலைய கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2018-ம் ஆண்டு முதல் கொல்கத்தா, அகமதாபாத், விஜயவாடா தவிர மற்ற விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர், தங்களின் ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைக்க வேண்டும்.

ஆதார் அடிப்படை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ள இந்த புதிய திட்டத்தால், பயணிகள் விமான நிலைய முனையத்திற்குள் நுழையும் போது அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை சோதிக்கப்படும். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபர் எந்த விமானத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார், எங்கு செல்கிறார் என்ற விபரங்களை பெற முடியும். பரிசோதனையின் போதே அவரைப் பற்றிய முழு விபரங்களும் தெரிந்து விடும்.

இதனால் பயணிகள் அடையாள அட்டைகள், பேப்பர் டிக்கெட்கள், போர்டிங் கார்டு ஆகியவற்றை காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம், பயணிகளின் நேரம் சேமிக்கப்படுகிறது. ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதற்கான பார் கோடு டிக்கெட்டிலேயே அச்சிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...