வாகன தணிக்கையின் போது நடந்த விபத்தில் காவலர் பலி

கோவை, நவம்பர்.24

கோவையில் வாகனத் தணிக்கையின் போது கார் மோதிய விபத்தில் காவலர் பலியானார்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (31). 

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

கடந்த 15-ம் தேதி இரவு வேலந்தாவளம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்ற செந்தில் குமார் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டது.  அவரை மீட்ட சக காவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று பரிதாபமாக பலியானார்.  இது தொடர்பாக் கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வாகனத் தணிக்கையின் போது காவலர் ஒருவர் பலியான சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...