விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 24

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு மெமோ கொடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தகூட்டத்தில், நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோவையில் உள்ள மத்திய கரும்பு  இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தை மூடக் கூடாது எனக் கோரியும் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் விவசாயிகளுக்கு குறை தீர்ப்பு கூட்டம் மூலம் வழங்கப்படும்  விளக்கம் தமிழில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி , வேளாண்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லை. கோவை மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் தொடர்சியாக அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய கூட்ட பொருப்பாளர் வேளான் இணை இயக்குனர் மீதும் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் எனக் கோஷமிட்டனர். வருவாய் அலுவலர் முன்னிலையில் விவசாயிகள் முழக்க மிட்டதால்  குறை தீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...