கோவையில் கல்லூரி மாணவரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய விவகாரம் : புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கம்

கோவை, டிசம்பர் 6

கோவை தொண்டாமுத்தூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் கல்லூரி மாணவருக்கு செவித்திறன் பாதித்தாக கூறப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பா.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (18), இவரது நண்பர்கள் குன்னத்தூரைச் சேர்ந்த மிதுன் (19), முத்துகுமார் (18),இந்த மூவரும் சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மூவரும் கடந்த செவ்வாயன்று தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மாதவன் கல்லூரி மாணவர்களின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தக் கூறினார்.

ஆனால் மாணவர்கள் சிறிது தூரம் தள்ளிச் சென்று வாகனத்தை நிறுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் மாதவன் மிதுனை அடித்துள்ளார். பின்னர் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். வாகனத்தை ஒட்டி வந்த தினேஷ்  மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்.

இதனிடையே உதவி ஆய்வாளர் தாக்கியதில் மிதுனின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அங்கிருந்த நண்பர்கள் அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால் மாணவரின் செவித்திறன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து வீதிமீறல் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும தவிர தாக்குவது எந்தவகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி தொடர்ந்து கேள்வியெழுப்பிய நிலையில், புகார் கொடுத்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...