பரோல் விவகாரம் : தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு உயர்நீதிமன்றத்தில் நளினி விளக்கம்

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவேன் என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமது மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவர் வெளிநாடு தப்பிச் சென்று விடக்கூடும் என்று கூறி பரோல் வழங்க முடியாது எனத் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தற்போது நளினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கடந்த 2014-ம் ஆண்டு தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் தான் விடுதலைப் பெற முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, தற்போது பரோல் வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,  இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதைப் போலவே, தமக்கும் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என நளினி கேட்டு கொண்டுள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...