சேகர் ரெட்டியிடம் பணம்பெற்றாரா துணை முதலமைச்சர் ஓபிஎஸ்..? சிபிஐ விசாரணை கோரும் ஸ்டாலின்


டிசம்பர் 8

தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பணம் பெற்றதாக வருமான வரித்துறையினரிடம் கிடைத்துள்ள டைரியில் இடம் பெற்றுள்ள தகவலால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு டிசம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.33.6 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாகப் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கியப் பக்கங்கள் எனக் கூறி தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சர்களுக்கு சேகர் ரெட்டி வழங்கிய லஞ்சப்பணம் தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் மகாதேவன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர்களிடையே, கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளுக்கு மத்தியில், சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே,  சேகர் ரெட்டியின் டைரி தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேகர் ரெட்டி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்ற அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி அனைத்து உண்மைகளும் வெளிவர சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அது போன்ற டைரி ஏதும் இல்லை என அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் ஆங்கிலப் பத்திரிக்கைகள் பலவற்றிலும் இது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறு கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...