காங்கிரஸ் நிர்வாகி அளித்த காசோலை மோசடி புகாரை சட்டரீதியாகச் சந்திப்பேன் - கராத்தே மாஸ்டர் டோனி பொன்னையா பேட்டி

கோவை, டிசம்பர் 12

கோவை காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் அளித்த காசோலை மோசடி புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என மலேசியா நாட்டைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் டோனி பொன்னையா தெரிவித்துள்ளார். 

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு ஹயாசி - ஹா கராத்தே கழகம் செயல்பட்டு வருகிறது. 1976-ல் சென்னையில் துவங்கப்பட்ட இந்தக் கழகம் தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவில் 9 மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கான இந்திய பொறுப்பாளராக மலேசியா வாழ் தமிழர் டோனி பொன்னையா உள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணா கல்லூரியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்த டோனி பொன்னையாவின் மீது காசோலை மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், தனக்கு திருப்பூரில் அறிமுகமானார். 2002-ம் ஆண்டு அவரை ஹயாசி-ஹா கராத்தே கழக இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டார். 



இந்நிலையில், கோவை கருமத்தம்பட்டியில் தனக்கு, மனோகரன் வங்கி கணக்குத் தொடங்கிக் கொடுத்தார். கராத்தே கழக வளர்ச்சிக்கு தன்னிடம் இருந்து ரூ. 10 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். பணத்தைத் திருப்பி கேட்டபோது ரூ. 2 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தார். எஞ்சிய தொகையைக் கேட்டதற்கு, பணத்தை ஏமாற்றும் நோக்கில், அவரிடம் கொடுத்து வைத்திருந்த தனது பெயரில் துவங்கப்பட்ட வங்கியின் காசோலையில் போலியாகக் கையெழுத்திட்டு பணம் எடுக்க முயற்சித்தார். அந்தக் காசோலை, தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இதனால், அவர் தனது சகோதரர் சந்திரசேகர் மூலம் புகார் அளித்துள்ளார். 

இந்தப் புகார் குறித்து நீதிபதியிடம் தன் தரப்பு நியாயங்களைத் தெரிவித்துள்ளேன். மேலும், அகில இந்திய செயலாளர் பதவியில் இருந்து மனோகரன் நீக்கப்பட்ட பின்னரும், போலி கையெழுத்திட்டு சான்றிதழ்கள் வழங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் அளித்த புகார் மீது சட்டரீதியாக சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...