ஆர்.கே.நகரில் டோக்கன் முறையில் குக்கர் விநியோகிப்பதாகப் புகார் : பாத்திரக் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை

டிசம்பர் 14 

டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ராயபுரத்தில் உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள சோதனைச் சாவடியில் மத்திய ரிசர்வ் போலீசார் தனியார் பள்ளிக்கூட பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, பேருந்தில் பெட்டி பெட்டியாகக் குக்கர்கள், டிபன்பாக்ஸ் ஆகியவை ஏராளமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அது, கிறிஸ்தவ பள்ளிக்கூட பேருந்து என்பதால் பள்ளி நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர்.

அப்போது, கிறிஸ்துமஸ் விழாவுக்காகப் பள்ளி ஆசிரியைகளுக்கு பரிசு கொடுப்பதற்காக குக்கர் வாங்கி வருவதாகவும், அதற்கான இரசீது உள்ளது என்றும் தெரிவித்தனர். எந்தக் கடையில் யார் மூலம் வாங்கி வரப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தனர். அதனைப் போலீசார் சரிபார்த்து உறுதிப்படுத்தினர்.

அரசியல் கட்சியினர் யாரும் புகார் கூறாததால் அந்தப் பேருந்து விடுவிக்கப்பட்டது. காசிமேட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல, ஒரு வேனில் கொண்டு செல்லப்பட்ட 500 குக்கர்கள் பிடிபட்டது. அதுவும், கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பரிசு கொடுக்கக் கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்தியதால் போலீசார் அந்த வாகனத்தையும் விடுவித்தனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதால் குக்கர் ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு இரசீது இருந்தால் மட்டுமே அதை விடுவிக்கின்றனர்.

இந்த நிலையில், ராயபுரத்தில் உள்ள குக்கர் விற்பனை செய்யும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். டோக்கன் முறையில் குக்கர் வழங்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர் இங்குச் சோதனையில் ஈடுபட்டனர்.  உள்ளனர். தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...