கல்லூரி பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்விக்கடன் முகாம்

கோவை, டிசம்பர் 14

கோவை மாவட்டத்தில் கல்லூரி படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி 2016- 2017 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாகக் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே, பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில், கோவை மாவட்டத்தில் இக்கவ்வியாண்டில் வங்கிக்கடனுக்கு மனு செய்து கிடைக்கப்பெறாமல், தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் உதவியுடன் கோவை, வின்சென்ட் சாலை, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

எனவே, கல்லூரியில் தற்போது பயிலும் மாணவ, மாணவியர்களில் கல்விக்கடன் தேவைப்படுவோர் வங்கிக்கடன் சார்பான விண்ணப்பத்தின் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...