கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் செய்யும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

கோவை, டிசம்பர் 15

கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் செய்யும் பகுதிகளில் கூடுதல் தலைமை செயலாளர், நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரே நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கும் கோவை மாவட்டத்தில் பல நாடுகளிலிருந்து விமானங்களை இயக்க வழிசெய்யவும், அதிநவீன தரத்துடன் கூடிய விமான நிலையமாக மாற்றவும், ஏதுவாக விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்கப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளது. 



அதன்படி, இன்று கூடுதல் தலைமை செயலாளர், நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரே உப்பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நில எடுப்பிற்கு உட்படும் பகுதிகளில் நேரில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது, நில எடுப்பிற்கு உட்படும் கிராமங்களின் எல்லைகள், தரிசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், விமான நிலைய குத்தகை நிலங்கள் மற்றும் விமான நிலையத்தினை சுற்றி மாற்று வழித்தடங்கள் உருவாக்கும் பகுதிளை ஆய்வு செய்தார்.  



தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் தலைமை செயலாளர் நில உடமைதாரர்களிடம் கருத்துக்களைக் கேட்டுக்கொண்டார். நில உடமைதாரர்களும் நிலஎடுப்பிற்கு ஈடாக இழப்பீட்டுத்தொகை உயர்த்தியும், மாற்று இடம் கோரியும், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வழங்கிய மனுக்களைப் பெற்றுக்கொண்டதுடன், அலுவலர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். மேலும், நிலஎடுப்பிற்கு உட்படும் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் போது நமது மாவட்டத்தில் விமான சேவையில் பயணியர் போக்குவரத்து மட்டுமல்லாது சரக்குப் போக்குவரத்தும் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும். மேலும், கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி உயர்வதோடு, தகவல் தொழில்நுட்பத்துறையிலும் ஏற்றம் பெறும். அண்டை மாவட்டமான திருப்பூர் பகுதியின் ஏற்றுமதியானது இதனால் பலமடங்கு உயரும். வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகும். அதிகளவில் புதிய தொழில் துவங்க தொழில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மையமாகக் கோவை திகழும். 

அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூர், கோலம்பூர், மலேசியா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தொடர்ந்து அதிகளிவிலான விமான சேவைகளை வழங்குவதால் கோவை மாவட்டத்தின் தொழில்வளர்ச்சி பெருகி கோவை மாவட்டமானது இந்தியாவிலேயே முன்னோடி மாவட்டமாகத் திகழும். கோயம்புத்தூர் வளர்ச்சி சார்ந்து, பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையிலும், முழுவதும் பொதுமக்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இப்பணிகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...