குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்த ஆய்வுக்கூட்டம்

கோவை, டிசம்பர் 15

கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

கோவை மாவட்டம் தமிழ்நாட்டிலுள்ள வளமான மாவட்டங்களில் ஒன்று.  இந்த மாவட்டம் தொழில் கட்டமைப்பு மட்டுமல்லாது வேளாண் வளமும் ஒருங்கே பெற்றமைந்ததே இதன் சிறப்பாகும்.  இதன் தலைநகர் கோவை நகரம் ஆகும்.  கோவை நகரம் 1981ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது.  திருத்தியமைக்கப்பட்ட அரசு ஆணையின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட எல்லை வரையறைப்படி மொத்தம் 151.44 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 1 ஊராட்சி இணைக்கப்பட்டு மொத்தப்  பரப்பளவாக 257.04 ச. கி.மீ. அளவில்  கோவை மாநகராட்சி  விரிவாக்கப்பட்டுள்ளது.  

விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சியின் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை 16,17,111.  இதனடிப்படையில் கோவை மாநகராட்சியின் 2035ம் ஆண்டின் இடைக்கால மக்கள்தொகை 24,87,500 மற்றும் 2050 ம் ஆண்டின் உச்சநிலை மக்கட் தொகை 32,79,000 என்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேற்படி  மக்கள்தொகையின் குடிநீர்த் தேவை நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் வீதம் இடைநிலை ஆண்டிற்கு (2035) நாளொன்றுக்கு 429.75 மில்லியன் லிட்டரும், உச்சநிலை ஆண்டிற்கு (2050) நாளொன்றுக்கு 565.55 மில்லியன் லிட்டரும் கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது, கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் நீராதாரத்தைக் கொண்டு கோவை மாநகராட்சிக்கான பிரத்யோக குடிநீர் திட்டம் ஆகிய இரு பெரும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆழியார் ஆற்றினை ஆதாரமாகக் கொண்ட குறிச்சி - குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பவானி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்ட கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

மேற்கூறிய திட்டங்களின் வாயிலாக பெறப்படும் உறுதிப்படுத்தப்பட்ட குடிநீரின் அளவை கணக்கில் கொண்டு, கோவை மாநகராட்சிக்கு இடைநிலை  ஆண்டிற்கு (2035) நாளொன்றுக்கு 178.30 மில்லியன் லிட்டரும் உச்ச நிலை ஆண்டிற்கு (2050) நாளொன்றுக்கு 318.17 மில்லியன் லிட்டர் அளவு குடிநீர் கூடுதலாகத் தேவைப்படுகிறது. கோவை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, கூடுதல் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு குடிநீர் அபிவிருத்தித் திட்டம் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், பவானி ஆற்றில் சமயபுரம் அருகில் அமைந்துள்ள மின்வாரிய மின்உற்பத்தி நிலையத் தடுப்பணையில் இருந்து 0.5 கி.மீக்கு முன்பகுதியில் நீர்சேகரிப்பு கிணறு 21.00 மீ விட்டம் மூலம் இயல்பு நீர் சேகரிக்கப்பட்டு 2032 மி.மீ. விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலமாக 8.0 கி. மீ. தூரம் நீர் உந்தப்பட்டு தாசனூரில் புதியதாக கட்டப்படவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நீர் சுத்திகரிக்கப்படும். 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 2,032 மி.மீ. விட்டமுள்ள இரும்புக் குழாய்கள் மூலமாக 9.0 கி.மீ தூரம் இரும்புக் குழாய்கள்மூலமாக கட்டன்மலை அருகில் 

புதியதாக கட்டப்படவுள்ள நீர் உந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 73 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியில்  சேகரிக்கப்படும்.  பின்னர் நீருந்து நிலையத்திலிருந்து 1.10 கி.மீ துhரம் குகை வழியாக கட்டன் மலையை கடந்து இராவுத்தநல்லூரில் புதிதாக கட்டப்படவுள்ள 73 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீருந்து நிலையம் சேகரிக்கப்படும்.    

நீருந்து நிலையம் 2ல் இருந்து 5.6 கி.மீ. தொலைவில் பன்னிமடை கிராமத்தில் அமையப்பெறவுள்ள 73 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படும். கோவை மாநகராட்சி 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலத்திற்கு ஒன்று வீதம் 6 பிரதான மேல்நிலைத் தொட்டிகள் அமைத்து மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே அமையப்பெற்ற / புதியதாக கட்டப்படவுள்ள மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1018 கோடியாகும்.  

இந்த சிறப்பு திட்டத்திற்காக 174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியினை வருகின்ற பிப்ரவரி 2018-க்குள் முடித்து, திட்டத்தினை துவங்கி, 2018ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக முழுவதுமாக முடிக்கும் வண்ணம் உரிய அறிவுரைகள் மற்றும் அலுவல் ரீதியான உத்தரவுகள் வழங்கப்பட்டது.  இத்திட்டம் முடிவடைந்த பின்னர், வருகின்ற நூறு ஆண்டுகளுக்கு கோவை மாநகரின் குடிநீர் தேவை முழுக்க உறுதி செய்யப்படும் என்பது இத்திட்டத்தின் மிகப் பெரிய சிறப்பாகும். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...