11 மாநிலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஏ.டி.எம். கொள்ளையர்களை தமிழக போலீசார் தான் பிடித்துள்ளனர் : கோவை காவல்துறை ஆணையர் பெருமிதம்

கோவை, டிசம்பர் 15

இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஏ.டி.எம். கொள்ளையர்களை தமிழக போலீசார் தான் பிடித்துள்ளனர் என்று  கோவை மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த 10-ம் தேதி நடந்த தனியார் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களுக்குள் புகுந்த வட மாநில வாலிபர்கள் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது தொடர்பாக, வட மாநில வாலிபர்கள் 8 பேரை கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து நாமக்கல் மாவட்டம் மற்றும் சேலம் மாநகர போலீசார்  நேற்று கைது செய்தனர். 



இது தொடர்பாக, கோவை மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 

கோவையில் ஏ.டி.எம் மையங்களில்  கொள்ளையடித்த வட மாநில வாலிபர்களை போலீசார் துரிதமாக கைது செய்துள்ளனர்.  கைதான 8 பேரும் கேரளா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து தப்பி வந்துள்ளனர்.  கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும்  நாட்டுத்துப்பாக்கி ஒன்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கொள்ளையர்கள் லாரியில் இரண்டு டீசல் டேங்குகளை பொருத்தி வைத்துள்ளனர். அதில் ஒன்றில் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வெல்டிங் இயந்திரம் மற்றும் சிலிண்டர்களை பதுக்கி வைத்துள்ளனர். 

மூன்று பேர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், இவர்களுக்கும் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிகிறது. 

இந்த கும்பலின் தலைவனாக முஸ்தாக் என்பவன் செயல்பட்டுள்ளான்.  இவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு தான் இந்த கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர். மிக நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிக்க முயன்றனர். ஆனால், மேற்குமண்டல போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்துள்ளனர். 

இந்த கைது நடவடிக்கையால் வட மாநில கொள்ளையர்களுக்கு தமிழக போலீசார் மீது பயம் ஏற்பட்டுள்ளது.  இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கு விரைவில் வெகுமதி வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, கோவை மாநகர துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள் மற்றும் மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...