மேட்டுப்பாளையத்தில் 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் முகாம்

கோவை, டிசம்பர் 16

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் வரும் 19-ம் நடக்கிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மேட்டுப்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த மருதூர், காரமடை, சிக்காரம்பாளையம் மற்றும் பெள்ளாதி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், வரும் 19-ம் தேதி காரமடையில் உள்ள லாரி உரிமையாளர் திருமண மண்டபத்தில் நடக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம். இதேநாளில், தாயனூரில் நடக்கும் முகாமில், வெள்ளியங்காடு, தோலம்பாளையம், காளம்பாளையம் மற்றும் கெம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

சிறுமுகை, இரும்பறை, இலுப்பநத்தம், வெள்ளபாளையம் மற்றும் ஜடையம்பாளையம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் வரும் 20-ம் தேதி

சிறுமுகையில் உள்ள சண்முகா திருமண மண்டபத்தில் நடக்கும் முகாமில் கலந்து கொண்டு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஒடந்துறை மற்றும் சிக்கதாசம்பாளையம் பகுதியில் வசிப்பவர்கள், அதேநாளில் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் பத்திரப்பகவுடர் திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட இடங்களில் முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கவும், ஆதார் அட்டைப் பெறவும், மருத்துவ காப்பீடு தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு வசதியாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அசல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை அசல் மற்றும் ரேசன்கார்டு அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். 

முகாம்களில், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏற்கனவே தேசிய அடையாள அட்டைப் பெற்றுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் கேட்டுக் கொண்டார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...