மயக்க மருத்துவத்தில் அவசர நிலை குறித்து கேஎம்சிஎச்-யில் பயிற்சி வகுப்பு

கோவை, டிசம்பர் 17

கேஎம்சிஎச் மருத்துவமனையில் “மயக்க மருத்துவவியலில் அவசர நிலை” என்ற தலைப்பில் தொடர் மருத்துவக் கல்வியாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலுமிருந்து மயக்கவியல் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள், மயக்கவியல் தொழில்நுட்பத்தினர், செவிலியர்கள் என 250-க்கும மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைதொடர்ந்து, கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிச்சாமி தலைமை உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மயக்க மருத்துவ அவசர நிலைகள் குறித்த இந்தப் பயிற்சியை வழங்கிய மயக்கவியல் துறைக்கு வாழ்த்துக்கள். இந்த மருத்துவமனையின் மயக்கவியல் துறை 18 மருத்துவர்களடங்கிய, 24 மணிநேரமும் செயல்படும் ஒரு துறையாகும். அனைத்து அறுவைச் சிகிச்சைக் கூடங்களும் மயக்க நிலையைக் கண்காணிக்கும், மேலைநாட்டு மருத்துவமனைகளுக்கு நிகரான, நவீன மருத்துவக் கருவிகளைக் கொண்டுள்ளன. எனவே, முன்னரே முடிவு செய்யப்பட்ட அல்லது அவசர நிலை காரணமாக அன்றாடம் செய்யப்படும் சிறிய அல்லது சிக்கலான அறுவை சிகிச்சைகளும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.



இந்த நிகழ்ச்சியின் தலைவரான டாக்டர் என். செல்வராஜன் மற்றும் செயலரான டாக்டர் சுப்பையா செல்லையா ஆகியோர் இந்த பயிற்சி வகுப்பு, மயக்க நிலையில் எதிர்பாராமல் நிகழக்கூடிய அவசர நிலைகளில் நோயாளிகளை பாதுகாப்பாகக் கண்காணிக்கும் அறிவையும், திறனையும் மேம்படுத்தும் என்று கூறினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...