புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, டிசம்பர் 20

பல்நோக்கு பண்ணைக்குட்டை வளர்ப்புத்திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது எனக் கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மாநில அளவில் மீன்வளர்ப்புப் பரப்பினை அதிகப்படுத்தவும், மாவட்ட அளவில் மீன் உற்பத்தியை பெருக்கிடவும், உள்ளூர் பொதுமக்களின் மீன் உணவுத் தேவையை நிறைவேற்றிடும் வகையில், பல்நோக்கு பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு, பரப்பில் 200 எண்ணம் 2500 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கவும் மற்றும் ஒருமுறை உள்ளீட்டுச் செலவினத்திற்கும் அலகு ஒன்றுக்கு ரூ. 1,28,500-ல் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மீன்வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் சொந்த நிலமும், குத்தகை நிலமெனில் 10 வருடக் குத்தகை ஒப்பந்தமும் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பப்படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 27.12.2017 ஆகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மீன்வள உதவி இயக்குநர்,

எண்: 4 எஸ்.வி. காம்ப்லெக்ஸ் 2-ம் தளம், 

வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு,

திண்டல் அஞ்சல், ஈரோடு 638 012.

தொலைபேசி எண்: 0424 2271912.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...