கோவையில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு ரயில் கொள்ளையிலும் தொடர்பா? : சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோவை, டிசம்பர் 20

கோவையில் ஏ.டி.எம். மையத்தில் புகுந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலுக்கு சேலத்தில் நடைபெற்ற ரயில் கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த 10-ம் தேதி அடுத்தடுத்து அமைந்த 3 ஏ.டி.எம். மையங்களில் புகுந்த வட மாநில கொள்ளையர்கள் ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இந்த கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 8 பேரை நாமக்கல் மற்றும் சேலம் மாநகர போலீசார் உதவியுடன் கோவை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இன்று 6-வது நாளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த ரயில் கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்று  சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

5 கோடி கொள்ளை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்ட ரயிலில் இருந்து ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

தற்போது ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள 8 வட மாநில வாலிபர்களும் இதே போல் கியாஸ் வெல்டிங் இயந்திரத்தைக் கொண்டே கொள்ளையடித்துள்ளனர். 

இதனால், ரயில் கொள்ளை வழக்கில் இவர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி முடிவு செய்தனர். 

அதன்படி, இன்று கோவை வந்த அவர்கள் கைதான வடமாநில கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...