நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய திருச்சி விமான நிலையத்தின் ”மாதிரி கட்டமைப்பு வரைபடம்” ரெடி

டிசம்பர் 22

நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு வரைபடம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.



இந்தியாவில் மிகவும் பழமையான விமான நிலையங்களில் ஒன்றான திருச்சி விமான நிலையம், தமிழகத்தில் சென்னை, கோவையைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிலையம் என்ற தரத்தைப் பெற்றுள்ளது. விமான போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை கையாள்வதில் கடும் இட நெருக்கடி காணப்படுகிறது. 



இதனைத்தொடர்ந்து, புதிய முனையம் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, திட்ட ஆலோசனை குழு திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்தது. அப்போது அந்தக் குழு, திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் ரூ.897 கோடியில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை இறுதி செய்து ஆலோசனை வழங்குவதற்காக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் தங்களது திட்ட அறிக்கையை இறுதி செய்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசிடம் வழங்குவார்கள். எனக் கூறியிருந்தது. 



இந்த நிலையில், பாஸ்கல் + வாட்சன் கட்டமைப்பு திட்டமிடும் நிறுவனம், நவீன கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக இருக்கும் திருச்சி விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு வரைபடத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கியது. 



அதில், புதிய முனையமானது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், பசுமை வளாகமாக அமையும். குறைந்த அளவு மின்சக்தியில் எரியும் எல்.இ.டி. விளக்குகள் மட்டுமே அமைக்கப்படும். கழிவு நீர் வீணாக்கப்படாமல் மறுசுழற்சி அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்டு விமான நிலைய வளாகத்தில் உள்ள தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படும். மின்சார தேவைக்காக புதிய முனைய வளாகத்தில் சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் 1 அல்லது 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வகையில் இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது. 

மேலும், 2020 ஆம் ஆண்டுக்குள் கட்டமைப்பு பணிகள் நிறைவடையும் என்றும், உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, திருவனந்தபுரம், சவுத்ரி சரன் சிங் சர்வதேச விமானநிலையங்களில் அமைக்கப்பட இருக்கும் புதிய முனையங்களின் மாதிரி கட்டமைப்பு வரைபடமும் வழங்கப்பட்டது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...