ஜெ., வீடியோவில் தவறு இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: புகழேந்தி

கோவை, டிசம்பர் 23

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவில் தவறு இருப்பதாக நிரூபித்தால், அரசியலை விட்டே வெளியேறத் தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார். இந்த வெற்றி திருப்புமுனையை ஏற்படுத்தும். ஒருசிலரை தவிர அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதற்கும், டிடிவி தினகரனுக்கும் தொடர்பு இல்லை. அந்த வீடியோவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவில் தவறு இருக்கிறது என நிருபீக்கப்பட்டால், நாங்கள் அரசியலை விட்டே வெளியேறத் தயார்.

ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுவது வேதனையளிக்கிறது. சோபன்பாபு தந்தை என அம்ருதா சொல்லாதது ஏன்..? என ஜெயலலிதா புகழை கெடுக்கும் வகையில் நீதிமன்றம் கேள்வி எழுப்புவது பாராட்டத்தக்கது அல்ல. பொய் பிரச்சாரம் செய்யும் அம்ருதா மீது முதலமைச்சர் ஏன் வழக்கு தொடரவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வேன்.

2ஜி தீர்ப்பை நாங்கள் வரவேற்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. மேல்முறையீட்டு வழக்கைத் திமுகவினர் சந்திப்பார்கள். மதுசூதன் வெற்றி பெற்று அமைச்சராகி விடுவாரோ என்ற பயம் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உள்ளது. குக்கர் சின்னத்தில் பொதுத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். டிடிவி தினகரன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் செல்லும் போது, யார் யார் ஸ்லீப்பர் செல் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...