மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி

கோவை, டிசம்பர் 24

தமிழக எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் அழுகிய நிலையில் சிறுத்தைப்புலியின் உடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என வனத்துறை கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தமிழக- கேரள எல்லைப்பகுதியான மளுக்கப்பாறை எஸ்டேட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரது மகன் திலீப்குமார் (12) சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது தொழிலாளர்கள் குடியிருப்புக்குள்  கோழியை பிடிப்பதற்காக வந்த சிறுத்தைப்புலி கோழியைப் பிடித்து விட்டு ஓடிய போது திலீப்குமார் மீது மோதியதில் அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்து அவனது நெற்றியில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், வனத்துறையினர் கூண்டு வைக்கவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உலா வந்த சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கேமரா வைத்து கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைப்புலி கேமராவில் பிடிபடவில்லை.



இந்நிலையில் இன்று மளுக்கப்பாறை எஸ்டேட் டிவிசன் எடமலை ரேஞ்சுக்கு உட்பட்ட 10-வது லைன் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் துர்நாற்றம் வந்த பகுதியில் சென்று பார்த்த போது புதருக்குள் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எடமலை ரேஞ்ச் வனத்துறை அதிகாரி ஜெயகுமார் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி இறந்த சிறுத்தையை உடற்கூறு ஆய்வு செய்தார். இது உயிரிழந்து மூன்று நாட்கள் இருக்கும் எனவும், உடல்நலக்குறைவால் அச்சிறுத்தை இறந்துள்ளது எனவும் வனத்துறை கால்நடை மருத்துவர் டோமி தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...