நீலகிரியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டிசம்பர் 30

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது, பல்வேறு அரசு துறைகளில் முடிவுபெற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



உதகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோத்தகிரி சந்திப்பில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியினைப் பார்வையிட்டார். பின்னர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழக்கண்காட்சியில், காய்கனிகளால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவத்தை கண்டார்.



உதகை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளில் முடிவுபெற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில், ”நீலகிரி அகவை 200” குறுந்தகட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கிக் கவுரவித்தார்.



Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...