கோவையில் 100 பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்த ஆர்வலர்கள்

கோவை வனப்பகுதியில் தன்னார்வலர்கள் நடத்திய கணக்கெடுப்பில் 100 பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளன.


கோவை: கோவை வனப்பகுதியில் தன்னார்வலர்கள் நடத்திய கணக்கெடுப்பில் 100 பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளன. 



கோவை வனத் துறையினர் மற்றும் 'ஆக்ட் ஆப் பட்டர்பிளை' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகள் போன்ற உயிரினங்களைக் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. 



கடந்த சனிக்கிழமை கோவை வனக் கோட்டத்தில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு பணி நேற்று முடிவடைந்தது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தன்னார்வலர்கள் பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுத்தல், அவற்றைப் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளைக் மேற்கொண்டனர். 



இது தொடர்பாக, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், " கோவையின் பல்வேறு பகுதிகளில் 230-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் உள்ளன. 79-ஆக இருந்த தட்டாம்பூச்சி இனங்கள் தற்போது 80-ஆக அதிகரித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் வனத் துறையில் இருந்து 70 பேரும், பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் 30 பெரும் கலந்து கொண்டனர். 



இதில் பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கணக்கெடுத்த குழு 98 வகையான பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்தது" என்றார். 

பட்டாம்பூச்சி கணக்கெடுப்பில் ஆரஞ்சு அவள்ட், எல்லோ பிரிஸ்டட் பிளாட், நீலகிரி டைகர் போன்ற அறிய வகை பட்டாம்பூச்சிகள் தென்பட்டன. 

அதிக பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்த மற்றும் புகைப்படம் எடுத்த குழுவினருக்கு கோவை வனக் கல்லூரியில் பரிசுகள் வழங்கப்பட்டன. 

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...