புகழ்பெற்ற பூச்சு காளை ”புல்லிபாய்” இயற்கை எய்தியது

வயது முதிர்ச்சியால் புகழ்பெற்ற பூச்சுகாளை எனப்படும் ”புல்லிபாய்” காளை இயற்கை எய்தியது.

வயது முதிர்ச்சியால் புகழ்பெற்ற பூச்சுகாளை எனப்படும் ”புல்லிபாய்”  காளை இயற்கை எய்தியது. 



1998-ல் பிறந்து 2001-ல் இருந்து பூச்சு காளையாக செயல்பட்ட புல்லிபாய், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் பொக்கிஷமாக திகழ்ந்தது. உலகத்தில் அதிகமாக படம் பிடிக்கப்பட்ட காளை புல்லிபாய் (#bullyboy). வயது முதிர்ச்சியின் காரணமாக, இந்த மண்ணை விட்டு பிரிந்த புல்லிபாயின் மறைவிற்கு ஜல்லிக்கட்டு பிரியர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். விரைவில், புல்லிபாய் காளைக்கு நினைவுச்சின்னமும், அருங்காட்சியமும் ஏற்படுத்தப்படும். 



உன் உடல் அழகில் இனி கிடைப்பது மிகமிக அரிது... நீ ஒரு தனிப்பிறவி... நீ வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்... நீ வாழ்ந்த இடமும் ஒரு அரசனிடம், உன் பெருமை என்றும் மறையாது..      

காங்கேய வாம்சத்தின் கட்டழகு சிம்மமே

இளைஞரின் மனத்தினிலே இளைக்காத தங்கமே

ஈடில்லா அழகோடு இதயத்தில் வாழ்ந்தாலும்

இமயத்தின் உயரத்தை இன்புகழால் உடைத்தாலும்

மரணத்தின் வாயிலிலே மனம்நொறுங்க செய்தாயே

எத்தனையோ படைப்புக்கள் என்மனத்தில் உதித்தாலும்

அத்தனைக்கும் தகப்பனாய் ஆண்மகனே நீயிருக்க

நெஞ்சத்தின் நினைவுகளோ நொடியினில் உடைந்ததுவே

கம்பீர நடையிட்டு காடெல்லாம் நீடக்க

காண்போரின் கண்களும் கனப்பொழுதில் விரிந்திடுமே

மீண்டும் காண்பேனோ, மீளாத உன்நடையை

திமிலின் சிறப்பினிலே, திக்கெட்டும் ஆண்டவனே

திரும்ப காண்பேனே, திகட்டாத நின்அழகை

வையத்தின் பரப்பினிலே, வானவில்லாய் திரிந்தவனே

உயரிய கொம்புகளை உயர்த்தியே நீநடக்க

காதலித்த பூமிமகள் கரம்கொண்டு அணைத்தாளோ

இருபது அகவையிலே இடம்விட்டு மறித்தவனே

மண்ணின் மடியினிலே மாசின்றி நீயுறங்க

மானிட மனத்தினிலே மன்னனாய் வாழ்ந்திடுவாய்.

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...