ஐ லீக் கால்பந்து போட்டியில் நாளை (பிப்.,07) மோகன் பகன் அணியுடன் சென்னை மோதல்

ஐ லீக் கால்பந்து தொடரின் நாளைய ஆட்டத்தில் சென்னை அணி, பலம் வாய்ந்த மோகன்பகன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியில், 5 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது.

கோவை : ஐ லீக் கால்பந்து தொடரின் நாளைய ஆட்டத்தில் சென்னை அணி, பலம் வாய்ந்த மோகன்பகன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியில், 5 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. 



இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்கும் ஹுரோ ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் விளையாடி, அதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 6 போட்டிக்குத் தகுதி பெறும். சென்னை அணிக்கு கோவை வ.ஊ.சி உள்விளையாட்டு அரங்கம் சொந்த மைதானமாக உள்ளது. தற்போது, ஐந்து போட்டிகள் மீதமுள்ள நிலையில், நாளை (பிப்.,07) பலம் வாய்ந்த மோகன் பகன் அணிக்கு எதிராக ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்க உள்ளது.

நாளை நடக்கும் போட்டி தொடர்பாக இரு அணியினரின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், மோகன் பகன் அணியின் பயிற்சியாளர் சங்கர்லால் சக்ரபோர்த்தி கலந்து கொண்டு கூறும்போது, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் தங்களை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் சென்னை வீரர்கள் சிறப்பாக விளையாடினர். விளையாட்டில் சில நேரங்களில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். நாளை நடைபெறும் போட்டி தங்கள் அணிக்கு சவாலாக இருக்கும். 

மேலும், தங்கள் அணியில் வெளிநாட்டு வீரர்கள் குறைவாக விளையாடுகின்றனர். சென்னை அணியில் சூசைராஜ் உள்ளிட்ட சிலர் சிறப்பாக ஆடுகின்றனர். போட்டிகளில் வெற்றி வாய்ப்புகளை சென்னை அணி தவற விட்டதால், புள்ளிகள் அடிப்படையில் பின் தங்கியுள்ளது. நாளைய போட்டியில் தங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து, சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் பேசும்போது, ஐந்து போட்டிகள் மீதமுள்ள நிலையில், நாளை மோகன் பகன் அணிக்கு எதிராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால், தலை சிறந்த அணியை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் சூப்பர் 6 சுற்றுக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகும். கடந்த போட்டியில் மோகன் பகன் அணிக்கு எதிரான போட்டியில் 10 வீரர்களைக் கொண்டு விளையாடி வெற்றி பெற்றோம். அதற்குப் பழிதீர்க்கும் விதமாக தங்களை வெல்ல ஆக்ரோஷத்துடன் அந்த அணி களமிறங்கும். எனவே, அதற்கேற்ப தற்போதைய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அணி வீரர்கள் சார்லஸ் மற்றும் ரொமாரியோ காயம் காரணமாக விளையாடாத நிலையில், நாளைய போட்டியில் புதிதாகக் கொரிய வீரர் கிம், செர்பியா வீரர் அலெக்சாண்டர் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, தங்களுடைய அணி ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்க உள்ளது. வெற்றி பெறும் நோக்கில் தங்களது அணி விளையாடும். இந்தியாவின் தலைசிறந்த அணியை வெற்றிபெறும் பட்சத்தில், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பும் அதிகம் உள்ளது, என்றார். 

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...