கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது 'பாடி ஒன் காமிரா'

கேரள மாநிலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டதைப் போன்ற 'பாடி ஒன்' காமிரா கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது.

கோவை : கேரள மாநிலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டதைப் போன்ற 'பாடி ஒன்' காமிரா கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது.  



போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போலீசாரின் வழக்கமான பணி. 

அவ்வாறு அதிக தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய சூழலில், ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசாரின் கைகளில் லஞ்சமாகத் திணித்து 'எஸ்கேப்' ஆவதும் சிலரின் வழக்கமான குணம் தான். 

இந்த சூழலில், போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் விதமாகவும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியின் போது போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காணவும் கேரள மாநில போலீசாருக்கு 'பாடி ஒன் காமிரா' (Body Worn Camera) வழங்கப்பட்டது.

அளவில் சிறியதாக இருக்கும் இந்த காமிரா போலீசாரின் சீருடையில் பொருத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் காட்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு  அறைகளுக்கு அனுப்பப்படும்.

அந்தந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவிறக்கம் செய்யாமல் காமிராவில் பதிவான காட்சிகளை போலீசாரால் அழிக்க முடியாது. 

போலீசாரை கண்காணிக்கும் இந்த திட்டம் கேரள மாநிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தமிழகத்திலும் இது போன்ற காமிராக்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சமீபத்தில்  நெல்லை மாவட்ட போலீசார் 'பாடி ஒன் காமிரா'வை உபயோகிக்கத் தொடங்கினர்.

கோவை மாநகர போலீசாருக்கும் இந்த காமிராக்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து டிரையல் அடிப்படையில் போக்குவரத்து போலீசாருக்கு இந்த காமிரா வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறுகையில், " 'டிரையல்' (Trial) அடிப்படையில் ஒரே ஒரு 'பாடி ஒன் காமிரா'  வரவழைக்கப்பட்டு மாநகரில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான வரவேற்பு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் மற்ற போலீசாருக்கும் இந்த காமிரா வழங்கப்படும்" என்றார்.

நாளை முதல் செயல்பட இருக்கும் இந்த காமிராவுக்கு கோவை மாநகர மக்கள் எவ்விதமான வரவேற்பை தருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...