திருப்பூரில் கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து : 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருப்பூரிலிருந்து கரூரில் உள்ள சேரன் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரி பேருந்தை சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் ஒட்டிச் சென்றார். ஒலப்பாளையம் அருகே தஞ்சாவூரிலிருந்து வந்த ஆம்னி காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த தஞ்சாவூரை சேர்ந்த ஜெயராஜ் (34), கடலூரைச் சேர்ந்த ராஜேஷ் (22) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

காரில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த மகேந்திரன் (34) படுகாயமடைந்து ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் காங்கேயம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...