தெர்மாகோலுக்கு செல்லூர் ராஜு, சோப்பு நுரைக்கு கருப்பண்ணன்., இப்போது, மக்கள் தொகைக்கு செங்கோட்டையன்..!

மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்குக் காரணம் என்று கூறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.சி. கருப்பண்ணன் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்குக் காரணம் என்று கூறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.சி. கருப்பண்ணன் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 

தேக்கி வைக்கப்பட்ட நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல்களை பயன்படுத்தும் மாபெரும் திட்டத்தால் பிரபலமானவர் அமைச்சர் செல்லூர் ராஜு. " கோவை மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வருகிறது" என்று கூறி அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கவைத்துப் பிரபலமடைந்தவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன். 

மக்கள் நலப்பணிகள் செய்து பிரபலமான அமைச்சர்களைக் காட்டிலும், இது போன்று வேடிக்கையான கருத்துக்களாலும், திட்டங்களாலும் பிரபலமான அமைச்சர்களே அதிகம். அந்த வரிசையில் தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் இடம் பிடித்துள்ளார். 

வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " இந்தாண்டு 8 லட்சத்து 67 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வும், 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காகக் கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் 'காப்பி' அடிப்பதைத் தடுக்க தேர்வு மையங்களில் பறக்கும்படை மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். " என்றார். 

தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியை செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர். அதற்கு, " மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணம் " என்று அடேங்கப்பா பதிலை கொடுத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். 

அடுத்தடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க, சுதாரித்துக் கொண்ட அமைச்சர், " வரும் கால கட்டங்களில் அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்தரம் மேம்படும். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் " என்று கூறி எஸ்கேப் ஆனார். 

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...