உழவர் சந்தைகளில் நேரடியாக பால் விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், உழவர் சந்தைகளில் நேரடியாக பால் விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

கோவை: ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், உழவர் சந்தைகளில் நேரடியாக பால் விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

பால் விற்பனை மற்றும் கொள்முதல் விலையை அதிகரித்தல் தொடர்பாக நேற்று தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " கோவை மாவட்ட விவசாயிகள் பலர் கால்நடைகளை வளர்த்து பால் கறந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தனியார் பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தீவனங்கள் கிடைக்க பெறுவதில் சிக்கல் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.20-லிருந்து ரூ.22 வரையும் தனியார் பால் வியாபாரிகள் ரூ.23-லிருந்து ரூ.25 வரையும் கொடுக்கின்றனர். சராசரியாக 1 லிட்டர் பாலின் உற்பத்திக்கு ரூ.20 ஆகும் நிலையில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேறவில்லை. மேலும் கொள்முதல் செய்யும் பாலின் விலையை ரூ.35-ஆக நிர்ணயிக்க வேண்டும்." என்றார்.

தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், உழவர் சந்தைகளில் நேரடியாக பால் விற்பனை செய்ய விவசாயிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...