தொடங்கியது +2 தேர்வு : கோவையில் 38,833 பேர் தேர்வு எழுதுகின்றனர்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தனித் தேர்வர்கள் என 38 ஆயிரத்து 903 பேர் எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தனித் தேர்வர்கள் என 38 ஆயிரத்து 833 பேர் எழுதுகின்றனர். 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. கோவை கல்வி மாவட்டத்தில், 86 மையங்களில் நடக்கும் இத்தேர்வை, 30 ஆயிரத்து 28 மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர, ஏழு மையங்களில் ஆயிரத்து 729 தனித் தேர்வர்களும் எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 27 மையங்களில் 6 ஆயிரத்து 805 மாணவர்களும், ஒரு மையத்தில் 341 தனித் தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர். 



தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் 12 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அந்த மையங்களில் இருந்து 23 வழித்தடங்கள் மூலமாக காலை 6 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. 20 மாணவர்களுக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் 2800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அனைத்து நோடல் மையங்களிலும், தேர்வர்களுக்கான விதிமுறைகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் 

கோவை கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 27 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 23 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 29 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 2 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை வருவாய் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 26 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 31 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு சார்ந்த, அனைத்து விதமான புகார்களையும், அறை கண்காணிப்பாளர் அல்லது நோடல் மைய ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்த புகார்களை 0422-2391062 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...