காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு அரசு பணியிடங்களில் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவை: காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு அரசு பணியிடங்களில் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



மத்திய, மாநில அரசுப் பணிகளில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சதவீத வேலை வாய்ப்பினை உடனடியாக வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னதாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர், சைகை முறையில் பேசிய அவர்கள், "கடந்த பல ஆண்டுகளாக வேலை வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. அரசு அலுவலகங்களுக்கு சென்று தகவல் அறிய முற்பட்டால் எங்களை அலைகழிகின்றனர். மேலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வரை பலருக்கு வேலை கிடைக்கவில்லை.

ஒரு சதவீத வேலை வாய்ப்பை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி துடியலூர் வேலை வாய்ப்பு அலுவலத்தை முற்றுகையிட உள்ளோம். இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...