செல்வம்பதி குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டு குளங்களில் ஒன்றான செல்வம்பதி குளத்தில் ஆயிரக்கணக்கான 'பொட்லாக்' வகை மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இதனால், குளக்கரையில் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டு குளங்களில் ஒன்றான செல்வம்பதி குளத்தில் ஆயிரக்கணக்கான 'பொட்லாக்' வகை மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இதனால், குளக்கரையில் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

முத்தண்ணன் குளத்தை அடுத்த செல்வம்பதி குளத்தில் ஏராளமான மீன் வகைகளும், பறவைகளும் உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து, விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். மீன்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக அவ்வப்போது, பல்வேறு வகை மீன் குஞ்சுகளும் குளத்தில் விடப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை குளத்தில் விடப்பட்ட ஆயிரக்கணக்கான 'பொட்லாக்' வகை மீன்கள் இறந்த நிலையில் மிதந்தன. அவை தற்போது, அழுகிய நிலையில் குளக்கரையில் ஒதுங்கியுள்ளன.



நஷ்டம் 

இதற்கான காரணம் குறித்து அங்கிருந்த மீனவரிடம் கேட்டபோது, "கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த திடீர் மழையால், பூமியின் வெப்பம் அதிக அளவு வெளியேறியது. இதனால், நீரில் உள்ள பிராண வாயுவின் (ஆக்ஸிஜன்) அளவு வெகுவாக குறைந்துவிடும். 

இந்த தட்பவெப்ப நிலையை ஒரு சில மீன் வகைகளால் சமாளிக்க முடியாது. அதனால் அவை இறந்துவிடும். ஐந்து ஆண்டுகளுக்கு முன், இதேபோல் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் மீன்கள் இறந்தன. இதனால், மீனவர்களுக்கு தற்போது ஐந்து லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது." என்றார்.

மீன்கள் இறப்புக்கு தட்பவெப்ப நிலை மாற்றம் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், குளத்து நீரில் கலக்கப்படும் ரசாயனக் கழிவுகளும், பிளாஸ்டிக் குப்பைகளும் முக்கிய காரணங்கள் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

ஆகாயத்தாமரை 

"குளத்து நீரில் ஏற்படும் ஆக்ஸிஜன் குறைபாட்டை சரி செய்வதிலும், கழிவுகளை அகற்றி நீரை சுத்திகரிப்பதிலும் குளத்தில் காணப்படும் ஆகாயத்தாமரைக் கொடிகளுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், அவை தற்போது அகற்றப்பட்டு வருகிறது. மேலும், நகரத்தின் சாக்கடைகளில் தேங்கியிருந்த குப்பைகள் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கலந்து விடுகிறது. பல இடங்களில் ரசாயன கழிவுகள் ஓடைகளில் கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மாசடைந்திருக்கும் நீரை நச்சுக்களாக மாற்றுகின்றன." என்கிறார் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன்.



மீன்கள் இறப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இரண்டு நாட்களாக செத்து மிதக்கும் மீன்களால் தற்போது அந்த பகுதியில் சுகாதாரம் சீர்கெட்டு வருகிறது. எனவே, இறந்த மீன்களை உடனடியாக குளத்திலிருந்து அப்புறப்படுத்தி மீதமுள்ள மீன்களையும், நீரையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...