காவிரி மேலாண்மை வாரியம் அமைவதில் சந்தேகம்..? முதலமைச்சர் நாளை அவசர ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்காததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்காததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு நாளையும் முடிவடைகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்கப் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் காவிரி பங்கீடு தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. இதனிடையே, காவிரி பங்கீட்டு குழுவில் எத்தனை பேர் இடம்பெறுவது, யாருக்கு என்ன அதிகாரம் என்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

தமிழகம், கர்நாடகா இடையேயான கருத்து வேறுபாடுகளை உச்சநீதிமன்றமே தீர்க்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை, சட்ட அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதனால், இரு மாநில பிரச்னையை தீர்த்து வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு, மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தாமதிக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, கெடு முடிந்த பிறகும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை (மார்ச் 29) மாலை மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது. 

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...