வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.’- எப் 8 ராக்கெட்

ஜிசாட்- 6ஏ தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி.’- எப் 8 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

ஜிசாட்- 6ஏ தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி.’- எப் 8 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6ஏ என்னும் புதிய செயற்கைகோளை வடிவமைத்து இருக்கிறது. இதை இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட்டில் முதல் நிலையில் திடஎரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணியான 27 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பகல் 1.56 மணிக்கு தொடங்கியது. 

ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் 49.1 மீட்டர் உயரமும், 415.6 டன் எடையும் கொண்டது ஆகும். இதில் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது. இது, பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றிவர இருக்கிறது.

ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் ‘எஸ்.பேண்ட்’ தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்றும் தயாரிக்கப்பட்டு செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ தயாரித்த ‘ஆன்டெனா’க்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் மற்றும் அதற்கு சிறிய மின்னணு சாதனங்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும் முழுமையாக பெற்று தரும் வசதியை இந்த ‘ஆன்டெனா’ ஏற்படுத்தி தரும். மேலும் தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செயற்கைகோள் பேருதவியாக அமையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...